பாடல் எண் : 48
செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப்
புல்வ ரம்பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே.
செல்வம் வறுமை என்று இல்லாமல் விண்ணோர் புழ புல் என்ற வரம்பில்லாமல் யார்க்கும் அரும் பொருளாய் எல்லையின்று இருப்பதின் பாதம் கண்டும் பிரித்தனன் என்றால் கல் போன்ற மனம் அடைந்த காரணமே.
#திருவாசகம்