பாடல் எண் : 52செய்வ தறியாச் சிறுநாயேன்செம்பொற் பாத மலர்காணாப்பொய்யர் பெறும்பே றத்தனையும்பெறுதற் குரியேன் பொய்யிலாமெய்யர் வெறியார் மலர்ப்பாதம்மேவக் கண்டுங் கேட்டிருந்தும்பொய்ய னேன்நான் உண்டுடுத்திங்கிருப்ப தானேன் போரேறே.செய்வதை அறியாத சிறுமைபட்டவனாய் ஆனேன். செழுமையான பொற்பாத மலரை காணாத பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுவதற்கு உரிமையுள்ளவன். பொய் இல்லாத மெய்யர் ஆர்வம் குறையாது மலர் பாதம் மேவக் கண்டும் கேட்டும் பொய்யாக இருந்தேன். நான் உண்டும் உடுத்தியும் இருப்பவனானேன் பேர் பெற்றவனே.#திருவாசகம்
Show more